தேவதானப்பட்டியில் உலக மனநல தின பேரணி
தேவதானப்பட்டி, அக். 12: தேவதானப்பட்டியில் உலக மனநல தின பேரணி நடைபெற்றது. தேவதானப்பட்டியில் மேரிமாதா கல்லூரி, தேவதானப்பட்டி காவல்நிலையம், ஆத்மா மனநல மருத்துவமனை இணைந்து தேவதானப்பட்டியில் உலக மனநல தின பேரணியை நடத்தினர். இந்த பேரணிக்கு மேரிமாதா கல்லூரி துணை முதல்வர் ஜோசி பரந்தொட்டு தலைமை வகித்தார். கல்லூரி நிதிநிர்வாக அலுவலர் பிஜோய், தேவதானப்பட்டி எஸ்.ஐ.,கள் வேல்மணிகண்டன், ஜான்செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக ஆத்மா மனநலம் மருத்துவமனை மருத்துவர் கரண் லூயிஸ் கலந்து மனநலம் குறித்து எடுத்துக்கூறினார். எஸ்.ஐ.,வேல்மணிகண்டன் கூறுகையில் மாணவர்களுக்கு மனநலம், சமூக ஒற்றுமை, பொது பொறுப்பு உள்ளிட்டவைகள் குறித்து விளக்கிகூறினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி மாணவர் ஆலோசனை குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் துறைப்பொறுப்பாளர் லட்சுமி, உளவியல் துறை பிரான்சிஸ் ஆண்டனி, சமூகப்பணி துறை தீப்ஷி ரேயான் ஆகியோர் செய்திருந்தனர்.