பெண் தூக்கிட்டு தற்கொலை
ஆண்டிபட்டி, டிச.11: ஆண்டிபட்டி அருகே சுந்தரராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மொக்கை மனைவி செல்லம்(50). இவர், சமத்துவபுரம், ரேசன் கடைத் தெருவில் வசித்து வருகிறார். செல்லம் என்பவருடன் உடன் பிறந்தவர்கள் 6 சகோதரர்கள் 6 சகோதரிகள். இதில் 6வது சகோதரி நாகு(44) என்பவருக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை. நாகு என்பவருக்கு கண்பார்வை குறைபாடு இருந்ததாக தெரிகிறது. இதனால் செல்லம் சமத்துவபுரத்தில் நாகுக்கு தனியாக வீடு அமைத்து இவரது பராமரிப்பில் இருந்து வந்துள்ளார்.இந்நிலையில் செல்லம் நேற்று முன்தினம் நாகு வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு பூட்டிய நிலையில் இருந்தது. கதவை தட்டி பார்த்தும் திறக்காததால், கதவை உடைத்து சென்று பார்த்த போது நாகு தூக்கு மாட்டி இறந்து கிடந்தார். ராஜதானி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement