நிதி திட்ட விழிப்புணர்வு
போடி, டிச.7: போடியில் தனியார் மண்டபத்தில் போடி சமூக முன்னேற்ற சங்கம், தேனி நபார்டு வங்கி சேர்ந்து மீன்வளம், கால்நடைகள் உற்பத்தியாளர்கள், விவசாயிகளுக்கு நிதி திட்டங்கள் ஒருங்கிணைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இயக்குநர் பார்வதி தலைமையில் நடை பெற்றது. நபார்டு வங்கி பொது மேலாளர் டாக்டர் ராபின்சன் ராஜா முன்னிலை வகித்தார். முதன்மை செயல் அலுவலர் பவுன்சாமி வரவேற்றார்.
விவசாயிகளுக்கும், கால்நடை, மீன் வளர்ப்போருக்கும் வங்கியின் மூலமாக வழங்கப்படும் கடன்கள், அரசு திட்டத்தில் மானிய கடன்கள், வங்கி கடன்கள், உதவி திட்டங்கள், ஆயுள் காப்பீடு, விவசாயிகளுக்கும், விவசாய பயிர்களுக்கும் காப்பீடு, பயிர் கடன் உள்ளிட்டவைகளுக்கு கடன் பெற்று தொழில், விவசாயத்தையும் மேம்படுத்தி முன்னேற்றலாம். உணவு உற்பத்தியை அதிகரிக்கலாம் என மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் 150 பெண்கள் உட்பட விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்