சிறுவனிடம் செயின் பறிப்பு
Advertisement
தேவதானப்பட்டி, டிச.6: தேவதானப்பட்டி பேருந்துநிலையம் அருகே வசித்து வருபவர் அருண்பாண்டியன்(31). இவர் மெயின்ரோட்டில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் கடையின் பின்புறம் இவரது மகன் ஜெகத்பாண்டியன்(4) விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது மகன் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இவர் சென்று பார்த்த போது 16 வயது மதிக்கத்த சிறுவன் இவரது மகன் கழுத்தில் இருந்த ஒரு கிராம் தங்கச்செயினை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளார். தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Advertisement