பழனிசெட்டிபட்டியில் குழந்தை பாதுகாப்புக்குழு கூட்டம்
தேனி, டிச. 5: தேனி அருகே பழனிசெட்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் குழந்தை பாதுகாப்புக் குழுக் கூட்டம் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி சேர்மன் வக்கீல்.மிதுன்சக்கரவர்த்தி தலைமை வகித்தார். செயல்அலுவலர் ராஜேஸ்அய்யனார்முருகன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி துணை சேர்மன் மணிமாறன் வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில் தேனி போலீஸ் டிஎஸ்பி முத்துக்குமார் கலந்து கொண்டு குழந்தை பாதுகாப்பு குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், இதற்கான சட்டங்கள் குறித்தும் விளக்கினார். இக்கூட்டத்தில், கிராம நிர்வாக அலுவலர் சிவகுமாரி, பேரூராட்சி கவுன்சிலர்கள் மலர்கொடி, சுகன்யா, சுகாதாரத்துறையினர், குழந்தை பாதுகாப்புக் குழு அலுவலக பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், பழனிசெட்டிபட்டி பழனியப்பா பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.