போடியில் குடிநீர் குழாய் சீரமைப்பு
Advertisement
போடி, டிச.3: போடியில் சேதமடைந்த குடிநீர் குழாயினை, நகராட்சி பணியாளர்கள் விரைந்து சீரமைத்தனர்.
போடி சுப்பிரமணிய சுவாமி கோயில் வடக்கு தெரு பிரிவில், திடீரென குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதை அடுத்து அப்பகுதியில் குடிநீர் விநியோகப்பதில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். இதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து நகராட்சி பொறியாளர் குணசேகரன் உத்தரவின் பேரில், நகராட்சி பணியாளர்கள் சேதமடைந்த குழாயை உடனடியாக சீர் செய்தனர். இதனையடுத்து அப்பகுதியில் குடிநீர் விநியோகம் சீரானது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Advertisement