சின்னமனூரில் தொடர் மழை
சின்னமனூர், டிச. 2: தமிழகத்தில் டிட்வா புயலால் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஆந்திரா மாநிலம் நோக்கி புயல் கரையை கடப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தூறல் மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை 4.30 மணியளவில் திடீரென ஒரு மணி நேரம் கனமழை கொட்டியது. இதனால் சின்னமனூர் சீப்பாலக்கோட்டை சாலை, எரசக்கநாயக்கனூர் சாலை, முத்துலாபுரம் மாநில நெடுஞ்சாலை, போடி மாநில நெடுஞ்சாலை, திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலைகளில் மழையின் காரணமாக ஆறு போல் மழைநீர் சென்றது. இதனால், வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினர். ஏற்கனவே பெரியாற்றுக்குள் மழைநீர் கரையை புரண்டு வரும் நிலையில், ஆங்காங்கே பெய்து வரும் மழையும் ஒன்று சேர்ந்து, மார்க்கையன்கோட்டை ரவுண்டானா வழியாகவும் கலப்பதால் நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. சின்னமனூரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்து வருகின்றனர்.