வீடுகளில் தொடர் திருட்டு தேனி எஸ்பியிடம் பழங்குடியினர் மனு
தேனி, செப். 2: தேனி அருகே அம்மாபட்டியில் உள்ள பழங்குடியினர் வசிக்கும் காலனியில் வீடுகளில் தொடர் திருட்டு நடந்ததாக கூறி நேற்று போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. தேனி அருகே அம்மாபட்டி கிராமத்தில் பழங்குடியின பிரிவை சேர்ந்த இரு வேறு பிரிவினர்களுக்கு அரசு வழங்கிய சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இப்பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தலைமையில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட இச்சமூகத்தினர் தேனி மாவட்ட போலீஸ் எஸ் பி அலுவலகத்திற்கு வந்து புகார் மனு அளித்தனர். அதில், தங்கள் வசிக்கும் பகுதியில் சில வீடுகளில் தொடர்ந்து திருட்டு நடந்து வருகிறது. வீட்டில் இருந்த டிவிகள், மணி மாலைகள் திருடப்பட்டுள்ளன. மேலும், வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டுள்ளன. இத்தகைய குற்றச்சப்பவங்களில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.