ரிசார்ட்டில் திருடியவர் கைது
மூணாறு, செப். 2: திண்டுக்கல்லைச் சேர்ந்த ஐ.டி ஊழியரான ஜாபர்சாதிக், நண்பர்களுடன் கடந்த வாரம் மூணாறு சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் மூணாறு அருகே பள்ளிவாசல் எஸ்டேட், மூலக்கடை பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் தங்கினர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை ஜாபர்சாதிக் அறையில் இருந்த பொருட்கள் மற்றும் ஏடிஎம் கார்டு மூலமாக ரூ.1.81 லட்சமும் திருடு போனது. இது குறித்த புகாரின் பேரில் மூணாறு போலீசார் நடத்திய விசாரணையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது அதே ரிசார்ட்டில் தங்கியிருந்த ராஜஸ்தானை சேர்ந்த அஜய் ரவீந்திரா(25) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை மூணாறு எஸ்.ஐ வினோத் குமார் தலைமையிலான போலீசார் திருநெல்வேலியில் வைத்து கைது செய்தனர்.
Advertisement
Advertisement