ஒன்றிய அரசு கவுரவ தொகை உடனே வழங்க வேண்டும்
Advertisement
கந்தர்வகோட்டை,ஜூன் 14: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் முழுவதும் கோடைமழை சிறு அளவில் பெய்து உள்ளது. இந்த மழையில் உதவியாலும், ஆழ்துளை கிணற்றில் உதவியலும் இப்பகுதி விவசாயிகள் கடலை விதைப்பது, மரவள்ளி கிழங்கு பதியம் செய்வது, கரும்பு நடவு என விவசாயம் செய்து வருகிறனர்.
இப்பகுதி விவசாயிகள் முழு நேர விவசாயம் செய்வதால் போதிய பணம் இல்லாமல் வட்டிக்கு வாங்கி விவசாயம் செய்யும் சூழ்நிலை உள்ளது. எனவே ஒன்றிய அரசு விவசாயிகளின் வளர்ச்சிக்காகவும், குறைந்த நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும் என வழங்கப்படும். கவுரவ தொகையை 17வது தவணை உடனடியாக வழங்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் ஒன்றிய அரசிடம் கேட்டுக் கொள்கிறார்கள்.
Advertisement