ரூ.1.33 கோடியில் மடம், தேர் கொட்டகை அமைக்கும் பணி பூமி பூஜையிட்டு எம்பி தொடங்கி வைத்தார் தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயிலில்
சேத்துப்பட்டு, ஜூலை 8: ேதவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயிலில் ரூ.1.33 கோடியில் புதிய மடம், தேர் கொட்டகை அமைக்கும் பணியை எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார். சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயிலில் திருத்தேர் மற்றும் அம்மன் தேர் நிறுத்த புதிய கொட்டகை அமைப்பதற்கும், கோயில் எதிரே உள்ள சுந்தரமூர்த்தி மடத்தில் புதிய மடம் கட்டிடம் கட்டுவதற்கும் இந்து அறநிலையத்துறை ரூ.1.33 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த பணிகளை தொடங்குவதற்கான பூமி பூஜை விழா நேற்று கோயில் வளாகம் மற்றும் மடத்தில் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஆரணி எம்பி எம்.எஸ் தரணிவேந்தன் கலந்து கொண்டு பூஜை பூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில், ஒன்றிய செயலாளர்கள் துரைமாமது, அன்பழகன், மோகன், நகர செயலாளர் மணி, மாவட்ட துணைச் செயலாளர் ஜெயராணி ரவி, பொருளாளர் தட்சிணாமூர்த்தி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் மீனாட்சி சுந்தரம் மற்றும் பெரியநாயகி அம்மன் கோயில் விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.