ிந்தாமணி புதூரில் அடிக்கடி உடையும் குடிநீர் பிரதான குழாய்
ச
சூலூர், ஜூலை 14: கோவை மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி சிந்தாமணிபுதூர் பகுதியில் பில்லூர் திட்ட குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குழாய் உள்ளது. இது பள்ளபாளையம், கண்ணம்பாளையம் பேரூராட்சிக்கு மட்டுமே தண்ணீர் வரும் பாதையாக உள்ளது. இந்நிலையில் பிரதான குழாயில் வாரம் ஒரு முறை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகும் அவல நிலை ஏற்படுகிறது. தொடர்ந்து குழாய் சரிபார்ப்பு பணிகளுக்காக சாலையை தோண்டும்போது வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில் கடந்த 10 நாளுக்கு மேலாக சிந்தாமணிபுதூர் பகுதியில கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் குடிநீர் குழாய் உடைந்தும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக இந்த உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர்.