திருப்பனந்தாள் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
கும்பகோணம், அக்.31: கும்பகோணம் வடக்கு உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பனந்தாள் துணை மின் நிலையத்திலிருந்து நாளை 1ம் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
                 Advertisement 
                
 
            
        இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகம் பெறும் திருப்பனந்தாள், சோழபுரம், பாலாக்குடி, அணைக்கரை, தத்தூவாஞ்சேரி, சிக்கல்நாயகன்பேட்டை, மானம்பாடி, மகாராஜபுரம், கோவிலாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
                 Advertisement 
                
 
            
        