பாலியல் தொழில் நடத்தி வந்த இருவர் கைது
தஞ்சாவூர், அக்.31: தஞ்சை முனிசிபல் காலனி 5ம் தெருவில் பாலியல் தொழில் நடப்பதாக மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
                 Advertisement 
                
 
            
        அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் மனைவி ஆதிசத்யா (31), நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் வடிவேல் (36) ஆகிய இருவரும் சேர்ந்து 2 பெண்களை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து ஆதிசத்யா, வடிவேல் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 பெண்களை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி அரசு மகளிர் காப்பகத்தில் சேர்த்தனர்.
                 Advertisement 
                
 
            
        