தஞ்சை வணிகவரி அலுவலகம் அருகே கரடுமுரடான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
தஞ்சாவூர், ஆக.30: தஞ்சாவூர் வணிகவரி அலுவலகம் அருகே கரடு முரடான சாலையை சீர் செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் வணிகவரி அலுவலகம் அருகே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு தினமும் ஏராளமானோர் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றன.
Advertisement
அந்த வழியானது மிகவும் மோசமான நிலையில் கப்பி கற்களால் உள்ளது. இதனால் அந்த வழியில் செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதேபோல் மழை காலங்களில் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீர்செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement