பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்.சிறப்பு முகாம்
திருக்காட்டுப்பள்ளி, செப். 27: பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்.சிறப்பு முகாம் நடைபெற்றது. தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அய்யாராசு, பள்ளி மேலாண்மைக்குழு தலைவி யோகேஸ்வரி முன்னிலை வகித்தனர். முன்னதாக உதவி தலைமையாசிரியர் முத்தமிழ்செல்வன் வரவேற்றார்.
Advertisement
சிறப்பு விருந்தினராக பூதலூர் வட்டாட்சியர் விவேகானந்தன், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கிவைத்து மாணவர்களுக்கு போதை பொருளின் தீமைகள் பற்றி விளக்க உரையாற்றினார். இந்நிகழ்வில் பள்ளி அனைத்து ஆசிரியர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நிறைவில் நாட்டு நல பணி திட்ட அலுவலர் பேகன் நன்றி தெரிவித்தார்.
Advertisement