குறுங்காடு வளர்ப்பு திட்டத்தில் 20 ஆயிரம் சதுர அடியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
தஞ்சாவூர், ஆக.27: குறுங்காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட திருப்பதி நகர் பகுதியில் சுமார் 20 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்ட மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் செடிகளை நட்டு வைத்து துவக்கி வைத்தனர்.
தஞ்சை இன்னர் வீல் அமைப்பும், தஞ்சை மாநகராட்சி மற்றும் திருப்பதி நகர் லட்சுமிபுரம் குடியிருப்போர் நல சங்கம் இணைந்து குறுங்காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட திருப்பதி நகரில் சுமார் 20,000 சதுர அடியில் மரக்கன்று நடும் விழா நேற்று நடைபெற்றது.
தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாநகராட்சி ஆணையர் கண்ணன் மற்றும் மண்டல குழு தலைவர் கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.