பாபநாசம் பேரூராட்சியில் தூய்மை பணி முகாம்
தஞ்சாவூர், ஆக.22: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் தூய்மை பணி முகாம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமையிலும், பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன், பேரூராட்சி துணைத் தலைவர் பூபதி ராஜா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற முகாமில்,சாலை மற்றும் தெரு ஓரங்களில் உள்ள குப்பைகள், செடி, கொடிகள் முழுமையாக அகற்றி சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
Advertisement
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் குலோரினேசன் செய்யப்பட்டது. மேலும், மழைநீர் வடிகால் தேங்கியுள்ள பகுதிகளில் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யப்பட்டது. இம்முகாமில் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பரமசிவம், அனைத்து பேரூராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement