தஞ்சை 39வது வார்டு பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய மின்மாற்றி அமைப்பு
தஞ்சாவூர், நவ.21: தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 39வது வார்டு பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய மின்மாற்றியை எம்எல்ஏ டி.கே.ஜி நீலமேகம் தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி 39வது வார்டு காமராஜர் நகர் மற்றும் அண்ணாநகர் பகுதிகளில் மின்னழுத்த குறைபாடு இருப்பதாக, தஞ்சை சட்டமன்ற உறுப்பினரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று அந்த இரண்டு பகுதியிலும் புதிய மின்மாற்றி அமைக்கபட்டது. அதனை நேற்று தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், மேயர் சன்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, கீழவாசல் பகுதி கழக செயலாளர் நீலகண்டன், மாமன்ற உறுப்பினர் உஷா, கழக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.