பட்டுக்கோட்டை நூலகத்தில் 58வது தேசிய நூலக வார விழா
பட்டுக்கோட்டை, நவ.21: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை கிளை நூலகத்தில் 58வது தேசிய நூலக வார விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டது. விழாவிற்கு வாசகர் வட்டத் தலைவர் மணிமுத்து தலைமை வகித்தார். கிளை நூலகர் அண்ணாமலை வரவேற்றார்.
Advertisement
விழாவில் எழுத்தாளர் ராஜா, ஆசிரியர்கள் சுமித்ரா, பரிமளம், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார், சுந்தரம், ஜெகநாதன், பதிவுறு எழுத்தர் செல்வமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் கணேஷ்ராமுவிற்கும், கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவி மாலினிக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. முடிவில் வாசகர் வட்ட துணைத்தலைவர் ஜோதிராஜன் நன்றி கூறினார்.
Advertisement