கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.54.70 லட்சத்திற்கு பருத்தி விற்பனை: வெளியூர் வணிகர்கள் குவிந்தனர்
கும்பகோணம், ஆக.21: தஞ்சாவூர் விற்பனை குழுவின் கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி தலைமையில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 346 விவசாயிகள், 72.940 மெ.டன் அளவு பருத்தி விளைபொருளை விற்பனைக்கு எடுத்து வந்தனர்.
Advertisement
மேலும், கும்பகோணம், செம்பனார் கோவில், பண்ருட்டி மற்றும் பிற மாவட்டத்தை சார்ந்த வணிகர்களும் மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தி விளைபொருளை கொள்முதல் செய்தனர். பருத்தி விளைபொருளானது அதிகபட்சமாக குவிண்டால் ரூ.7,749க்கும், குறைந்தபட்சமாக ரூ.7,268க்கும், சராசரியாக ரூ.7,521க் கும் என மொத்தம் ரூ.54.70 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
Advertisement