கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் ‘போதையில்லா தமிழ்நாடு’ கட்டுரை போட்டி
கும்பகோணம், ஆக.21: கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்கும் பொருட்டு மாணவர்களுக்கு இடையே ‘போதையில்லா தமிழ்நாடு’ என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இளநிலை இரண்டாம் ஆண்டு வேதியியல் மாணவி கௌசல்யா முதல் பரிசையும், முதுநிலை ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு மாணவி பிரியா இரண்டாம் பரிசையும், இளநிலை புள்ளியியல்துறை முதலாம் ஆண்டு மாணவன் நிஜந்தன் மூன்றாம் பரிசையும் தட்டிச்சென்றனர்.
பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் கோவிந்தராசு மற்றும் போதைப்பொருள் தடுப்பு குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் சரவணன் ஆகியோர் வழங்கினர்அப்போது, வேதியியல் துறைத்தலைவர் மீனாட்சிசுந்தரம், இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலாத்துறை தலைவர் தங்கராசு, ஒருங்கிணைப்பாளர் சரவணன், குழு உறுப்பினர்கள் உதயகுமார், சௌந்தரராஜன் மற்றும் அருள்தாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.