மாநகர திமுக சார்பில் மாணவர்களுக்கு மதிய உணவு
தஞ்சாவூர், நவ. 19: தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வரும் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தஞ்சை மாநகர திமுக சார்பில், தஞ்சை மேம்பாலம் பார்வை குறைபாடுடையோர் பள்ளியில் நடந்த மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் மேயர் சண்.ராமநாதன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமை வகித்து 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அசைவ உணவு பரிமாறினர்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி நீலமேகம், எம்.பி. முரசொலி, தலைமை செயற்குழு உறுப்பினர் து. செல்வம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாமன்ற உறுப்பினர்கள் புண்ணியமூர்த்தி, மேத்தா, நீலகண்டன், செந்தமிழ் செல்வன் மற்றும் மாவட்ட, மாநகர நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.