திருமங்கலக்கோட்டையில் தார் சாலை வேண்டும்
தஞ்சாவூர், நவ. 19: ஒரத்தநாடு தாலுகா திருமங்கலக்கோட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருமங்கலக்கோட்டை பகுதி மயானத்திற்குச் செல்லும் மண் சாலையை, தார் சாலையாக மாற்றி மின்விளக்கு வசதி அமைத்து தர வேண்டும். குண்டும், குழியுமாக உள்ள இச்சாலை மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது.
Advertisement
இதனால் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள வருபவர்கள் குறிப்பாக வயதானவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். சடலங்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் கூட இந்தச் சாலையில் செல்ல மிகவும் போராடுகின்றன. எனவே நல்ல சாலை அமைத்து, மின் விளக்கு வசதியை அமைத்துத் தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
Advertisement