மெலட்டூர் அருகே ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் டிரான்ஸ்பார்மர்
தஞ்சாவூர், செப்.19: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மெலட்டூர் அருகே அன்னப்பன்பேட்டையில் இருந்து குண்டூர், சாத்தனூர் செல்லும் பிரதான சாலையை நாள் ஒன்றுக்கு ஏராளமான கிராம பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சாலையின் ஓரம் அமைந்துள்ள வயல்வெளியில் மின்மாற்றி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்த மின்மாற்றியால் சாலையோரம் இருக்கும் மின்கம்பம் ஆபத்தான நிலையில், எந்த நேரமும் கீழே விழும் நிலையில் உள்ளது. ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வரும் இந்த சாலையில் ஆபத்து ஏற்படும் முன்பு போற்கால அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அதனை சீர் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement