தஞ்சாவூர் ரயில்வே குட்செட்டில் குண்டும், குழியுமாக உள்ள சிமெண்ட் சாலை: சீர் செய்ய கோரிக்கை
தஞ்சாவூர், அக் 18: தஞ்சாவூர் ரயில்வே குட்செட்டில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் மழைநீர் தேங்கி நிற்கிறது. தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் குட்செட்டு உள்ளது. இந்த குட்செட் மூலம் அரிசி நெல் மூட்டைகள் லாரிகளில் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
Advertisement
இந்த நிலையில் லாரிகளிலிருந்து வேகன்களுக்கு அரிசி மூட்டை ஏற்றுவதற்காக தஞ்சை குட்செட்டில் ரயில்வே துறை சார்பில் ரூ.9 கோடி செலவில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலையானது தற்போது குண்டும் குழியுமாக ஆக உள்ளது. தற்போது தஞ்சை மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் அந்த சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது. எனவே ரயில்வே துறை சார்பில் அந்த சாலையை சீர் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement