தமிழ் பல்கலைகழகத்தில் மொழி பெயர்ப்பு திறன் பயிற்சி பட்டறை
தஞ்சாவூர், செப். 18: தமிழ்ப் பல்கலைக்கழக மொழிபெயர்ப்புத்துறை, உள்தர உறுதிப்பாட்டு மையம் மற்றும் கல்விநிலை ஆய்வு இயக்ககம் சார்பில் ஒருநாள் மொழிபெயர்ப்புத் திறன் பணிப்பட்டறை பயிற்சி நடைபெற்றது. பல்கலைக்கழக அனைத்துத் துறைகளில் பயிலும் முழுநேர, பகுதிநேர முனைவர் பட்ட மாணவர்களுக்கான இப்பயிற்சி பல்கலைக்கழக பேரவை கூடத்தில் நடைபெற்றது. மொழிபெயர்ப்புத் துறைத்தலைவர் முருகன் வரவேற்று பேசினார். கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல்துறை துறைத்தலைவர் செல்வக்குமார் அறிமுகவுரை ஆற்றினர்.
துணைவேந்தர் குழு உறுப்பினரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான பாரதஜோதி தலைமையுரையாற்றினார். பதிவாளர் (பொ) பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். வளர்தமிழ்ப் புலமுதன்மையரும் அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை துறைத்தலைவருமான குறிஞ்சிவேந்தன், கல்விநிலை ஆய்வு இயக்கக இயக்குநர் மற்றும் நாடகத்துறை துறைத்தலைவர் கற்பகம் வாழ்த்தி பேசினர். வீர மணிகண்டன், வீரலெஷ்மி, ராஜேஷ், விஜயராஜேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார். மொழிபெயர்ப்புத்துறை இணைப்பேராசிரியர் ராஜேஷ் நன்றி கூறினார்.