கூட்டுறவு நகர வங்கி பொது பேரவைக்கூட்டம்
தஞ்சாவூர், அக்.17: தஞ்சை மாவட்டம் கருந்தட்டாங்குடி திராவிட கூட்டுறவு நகர வங்கியின் 106வது பொதுப்பேரவைக் கூட்டம் கடந்த 14.10.2025 செவ்வாய்கிழமையன்று நடைபெற்றது. இக்கூட்டம் வங்கியின் கூட்டுறவு சார்பதிவாளர்/செயலாட்சியர் அன்புச்செல்வன் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வங்கியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் ‘அ’ வகுப்பு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். உறுப்பினர்களுக்கு 14% பங்கு ஈவுத்தொகையாக ரூ.15,50,125/- வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement