பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம்
திருவையாறு, ஆக.15: திருவையாறு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்விதுறை வட்டார வள மையம் சார்பில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் காமராஜர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் சரஸ்வதி அம்பாள் உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
இதில், திருவாரூர் ஒன்றியத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பள்ளிகளில் இருந்து தலா 20 பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வீதம் 240 நபர்களுக்கு மேலாண்மை குழுவின் செயல்பாடுகள், ஆய்வுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரிய பயிற்றுநர் பிரதீப் செய்திருந்தார். வட்டார வள மையம் மேற்பார்வையாளர் சரவணன் பயிற்சியை ஒருங்கிணைத்தார்.