தாயுமானவர் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு வீடு தேடி ரேசன் பொருட்கள்
தஞ்சாவூர், ஆக.14: தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் தஞ்சை எம்எல்ஏ டி.கே.ஜி.நீலமேகம் மாற்றுத்திறனாளிகள் முதியோர்கள் இல்லத்திற்கு நேரில் சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் சென்னையில் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதன்படி தஞ்சை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 16வது வார்டில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் இல்லத்திற்கே நேரில் சென்று ரேசன் பொருட்களை தஞ்சாவூர் எம்எல்ஏ வழங்கினார். இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் அண்ணா பிரகாஷ், கார்த்தி, ராஜ்குமார், கௌதமன், தீபன், கந்தவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.