திருவையாறில் ரத்த தான முகாம்
திருவையாறு, அக்.13: திருவையாறு கலாம் அறக்கட்டளை, தஞ்சை அரசு மிராசுதார் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் மூன்றாம் ஆண்டு ரத்த தான முகாம் சீனிவாசராவ் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கலாம் அறக்கட்டளை நிறுவனர் சசிகுமார் தலைமை வகித்தார். தஞ்சை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் கிஷோர்குமார், வட்டார மருத்துவ அலுவலர் பிரதீப் முன்னிலை வகித்தனர்.
தஞ்சை ஆடிட்டர் ரவிச்சந்திரன், நிழல் அறக்கட்டளை நிறுவனர் பிரதீப்ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். கீழதிருப்பூந்துருத்தி பாஸ்கர் 100 வது முறையாக ரத்த தானம் செய்ததை பாராட்டி சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். முகாமில் 45 யூனிட் ரத்தம் தானம் பெறப்பட்டு அரசு ரத்த வங்கிக்கு வழங்கப்பட்டது. இதில் திருவையாறு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் லோகநாதன், அன்னை காவேரி பௌர்ணமி வழிபாட்டு குழு செயலாளர் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகிகள் ரவி, ராஜராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.