தஞ்சையில் எச்.ஐ.வி, எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
தஞ்சாவூர்,செப்.13: தஞ்சையில் எய்ட்ஸ் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டம் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் எச்.ஐ.வி, எய்ட்ஸ் பற்றிய விரிவான அறிவை மேம்படுத்திடவும், இளம்பருவ ஆரோக்கியம், மன ஆரோக்கியம் மற்றும் போதை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்திட கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
தஞ்சை பயிற்சி கலெக்டர் கார்த்திக் ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மாணவர்கள் மற்றும் மாணவிகள் என இரண்டு பிரிவாக நடைபெற்ற போட்டியில் 8 மற்றும் 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெற்றது. இதில் முதல் 10 இடங்களை பிடித்து மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.