பேராவூரணி நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பேராவூரணி, செப்.11: பேராவூரணி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் செந்தில்குமார் அறிவுறுத்தலின் படி, உட்கோட்ட எல்லைக்குட்பட்ட சிறு, குறு பாலங்களில் நீர் வழிப்பாதைகளில் மழைநீர் தேங்காமல் செல்லும் விதமாக சீர் செய்யப்பட்டது.
மேலும் பாலத்தின் மேற்பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்கும் வகையில் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை பேராவூரணி உதவி கோட்டப்பொறியாளர் விஜயகுமார், உதவிப்பொறியாளர் திருச்செல்வம் ஆகியோர் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர். மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் பாராட்டினர்.