கும்பகோணத்தில் இமானுவேல் சேகரன் பிறந்த நாள் விழா
கும்பகோணம், அக்.10: கும்பகோணத்தில் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு இமானுவேல் சேகரனார் 101வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. அப்போது அலங்கரிக்கப்பட்ட இமானுவேல் சேகரன் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் தேவேந்திரகுல வேளாளர் நலச்சங்க உறவின்முறை தலைவர் குமார் தலைமை வகித்தார். பசுபதி பாண்டியன் பாசறை தலைவர் குமரவேல் மற்றும் சக்திவேல் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் கீர்த்தி வரவேற்று பேசினார். இமானுவேல் சேகரன் நினைவுகளை நிர்வாகிகள் தேவேந்திரகுல மக்கள் இயக்க மாவட்ட செயலர் ஜெயக்குமார், மூவேந்தர் புலிப்படை மாவட்ட செயலர் டெல்டா பிரபு, அரசு போக்குவரத்து கழக சங்க பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பேசினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கும்பகோணம் தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை நல சங்கத்தினர் செய்தனர்.