கரூர் துயர சம்பவத்தை கண்டித்து விஜயை கைது செய்ய வலியுறுத்தி அதிராம்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம்
பட்டுக்கோட்டை, அக். 10: கரூரில் துயர சம்பவத்துக்கு காரணமான த.வெ.க. தலைவர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி அதிராம்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கரூர் துயர சம்பவத்தை கண்டித்து அதிராம்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
புரட்சிகர மக்கள் அதிகார பட்டுக்கோட்டை வட்டார செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார். தஞ்சை மண்டல பொறுப்பாளர் மாரிமுத்து, கண்டன உரையாற்றினார். தமிழக மக்கள் விடுதலை இயக்க தலைவர் முனைவர் ஜீவானந்தம்,பொதுச்செயலாளர் தங்ககுமரவேல் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் 41 பேரின் சாவுக்கு காரணமான தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை பிணையில் வெளிவர முடியாத கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும்.
தமிழக வெற்றி கழக விஜய்யிடமருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.