டிஎஸ்பி எச்சரிக்கை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பேராவூரணியில் ரத்த தான முகாம்
Advertisement
பேராவூரணி, அக். 7: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளை சார்பில் மஸ்ஜிதுத் தக்வா ஜுமுஆ பள்ளிவாசலில் இரத்ததானம் முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு மாவட்டச் செயலாளர் ஆவணம் ரியாஸ் தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் முஸ்தபா, மாவட்ட துணைச் செயலாளர் அஷ்ரப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்துகொண்டு உடல் ஆரோக்கியம் மற்றும் எடை தகுதியின் அடிப்படையில் 28 யூனிட் இரத்தம் தானம் அளித்தனர். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் சுதா குழுவினரிடம் 28 யூனிட் ஒப்படைக்கப்பட்டது.
முகாமில் கிளைத் தலைவர் முஹம்மது கனி, முன்னாள் தலைவர் பசீர் அலி மற்றும் நிர்வாகிகள் இஸ்மாயில்,வசீம் சேக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Advertisement