கொன்றைக்காடு அரசு பள்ளி மாணவர்கள் மாநில கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்க தகுதி
பேராவூரணி, நவ.5: பேராவூரணி வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டியில் முதலிடம் பெற்று, மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்ற கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி பவதாரணி செவ்வியல் இசை பாட்டில் மாவட்ட அளவில் இரண்டாம் இடமும், மாணவர் பிரகநீலன் களிமண் சிற்பம் வடிவமைப்பதில் மாவட்டத்தில் முதலிடம் பெற்று மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் (பொ)குமரேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமமூர்த்தி, பள்ளி மேலாண்மை குழு தலைவி கவிதா விநாயகமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
Advertisement
Advertisement