இந்திராகாந்தி சிலைக்கு காங்கிரசார் மரியாதை
தஞ்சாவூர், நவ.1: முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மிஷின் தெருவில் உள்ள இந்திராகாந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் வக்கீல் அன்பரசன் தலைமை வகித்தார்.
Advertisement
இந்திராகாந்தி சிலை க்கு ஒரத்தநாடு வட்டாரத் தலைவர் சுரேஷ் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஒரத்தநாடு சதீஷ்குமார், முஜீபூர் ரஹ்மான், பாபு, மாஷித், ரஷீத், பிரிட்டோ, மாலா ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட செய்தித்தொடர்பாளர் வக்கீல்.அன்பரசன் தலைமையில் அனைவரும் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
Advertisement