மது விற்ற 8 பேர் கைது 234 பாட்டில்கள் பறிமுதல்
ஒரத்தநாடு,அக்.28: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் சட்டவிரோத மது விற்ற 8 பேர் கைது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் சட்டவிரோத மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் ஒரத்தநாடு, திருவோணம், பாப்பாநாடு ஆகிய போலீஸ் நிலைய பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது, சட்டவிரோதமாக மது விற்பனை செய்த ஆத்தாங்கரைபட்டி ஹேமலதா (வயது48), பொய்யுண்டார்கோட்டை ராஜலிங்கம் (28), திருமங்கலக்கோட்டை கீழையூர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சேகர் (53), கோவிந்தராஜ் மகன் சேகர் (60), தொண்டராம்பட்டு ராஜேந்திரன் (47), திருமங்கலக்கோட்டை மேலையூர் ராமசாமி (51), திருவோணம் சந்தைப்பேட்டை சித்ரா (55), வெட்டுவாக்கோட்டை குமார்செல்வம் (55) ஆகிய 8 பேர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 2 பெண்கள் உள்ளிட்ட 8 பேர்களையும் கைது செய்தனர்.