மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்
Advertisement
தஞ்சாவூர், செப்.24: மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தஞ்சையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்திற்கு திட்ட தலைவர் அதிதூத மைக்கேல் ராஜ் தலைமை வகித்தார். திட்ட செயலாளர் காணிக்கை ராஜ் முன்னிலை வகித்தார்.
Advertisement