தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 803 மி.மீ மழை பதிவு: 13 வீடுகள் சேதம்;3 கால்நடைகள் இறந்தன
தஞ்சாவூர், அக்.23: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் இடைவிடாமல் பெய்து வருகிறது. தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகவே மழை பெய்து வருகிறது.
Advertisement
மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவு பெய்ய தொடங்கிய கனமழை நேற்று முன்தினம் பகல் முழுவதும் இடைவிடாமல் கொட்டியது. இரவிலும் விட்டு, விட்டு மழை பெய்தது. நேற்று காலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளன. மாவட்டத்தில் அதிகபட்சமாக பூதலூரில் 58.40 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்து வரும் தொடர் மழையால், ஒருவர் காயமடைந்துள்ளார். 3 கால்நடைகள் இறந்துள்ளன.
மேலும் 7 கூரை வீடுகள், 6 கான்கிரீட் வீடுகள் என மொத்தம் 13 வீடுகள் பகுதி அளவில் இடிந்து சேதம் அடைந்துள்ளன.
Advertisement