துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம்
Advertisement
திருக்காட்டுப்பள்ளி, செப்.22: திருவையாறு தெற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி, குதிரைவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
திருக்காட்டுப்பள்ளி அருகே அரசூர், விளாங்குடி புதிய பைப்பாஸ் சாலையில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் வெள்ளாம் பெரம்பூர் கழக மூத்த முன்னோடி கோவிந்தராஜ் நினைவாக திருவையாறு தெற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் மாபெரும் மாட்டுவண்டி, குதிரைவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. தஞ்சை மத்திய மாவட்ட மாவட்ட கழக செயலாளர் திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திர
சேகரன், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி ஆகியோர்கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
Advertisement