அதிராம்பட்டினம் நகராட்சியில் சுதந்திர தின விழா கோலாகலம்
Advertisement
பட்டுக்கோட்டை, ஆக.19: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில் 79ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நகராட்சி அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நகராட்சித் தலைவர் தாஹிராஅப்துல்கரீம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நகராட்சி துணைத் தலைவர் ராமகுணம்சேகரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் கனிராஜ் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள், நகராட்சி கவுன்சிலர்கள் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Advertisement