அரசு பள்ளிக்கு ரூ.27 லட்சத்தில் 2 வகுப்பறை கட்டிடங்கள் பள்ளி மாணவிகளை கொண்டு திறந்து வைத்த எம்எல்ஏ
Advertisement
கும்பகோணம், டிச.5: கும்பகோணம் தொகுதி விளந்தகண்டம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 2024-25ம் ஆண்டு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணி நிறைவு பெற்று திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான சாக்கோட்டை அன்பழகன் பங்கேற்று அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளை கொண்டு வகுப்பறை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
Advertisement