உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி: எச்ஐவி பாதித்த 2110 பேருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை
தஞ்சாவூர், டிச. 2: தஞ்சை மாவட்டத்தில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் 2110 பேருக்கு தமிழக அரசின் சார்பில் மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.1000 வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் ரயில்வே ஜங்ஷன் முன்பு தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் எம்எல்ஏ டி.கே.ஜி.நீலமேகம், துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, டிஆர்ஓ தியாகராஜன், வருவாய் கோட்டாட்சியர் நித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.