தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தச்சூர் - சித்தூர் 6 வழி சாலை திட்டம் விளை நிலங்களுக்கு செல்ல அணுகு சாலை அமைக்க வேண்டும்: விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்

திருத்தணி, ஜூலை 13: தச்சூர் முதல் சித்தூர் வரை 6 வழி சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விளை நிலங்களுக்கு சென்று வர ஏதுவாக அணுகு சாலை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் கோட்டாட்சியர் தீபா தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு ஆகிய சுற்று வட்டார பகுதிகளிலிருந்து விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement

கரும்பு விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன் பேசுகையில், திருவள்ளூர் மாவட்ட, தச்சூர் முதல் சித்தூர் வரை 6 வழி சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனால், பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் விளை நிலங்களுக்கு சென்ற வர சாலை வசதி ஏற்படுத்தும் வகையில் அணுகு சாலை அமைக்க வேண்டும். திருவாலங்காட்டில் உள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்த வேண்டும், மழைகாலம் தொடங்கும் முன்பு ஏரி, குளம், நீர்வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்பு அகற்றி தூர்வாரி நீரோட்டப் பாதையை சீரமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதேபோல் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் வேணுகோபால் பேசுகையில், நகரி - திண்டிவனம் அகல ரயில் பாதை திட்டத்தில் நிலம் இழந்த விவசாயிகளுக்கு பட்டா உட்பிரிவு செய்து தாமதமின்றி வழங்க வேண்டும். நொச்சிலி கிராமத்தில் இந்தியன் வங்கி அருகில் பிரதான சாலையில் 5 தெரு விளக்குகள் அமைக்க மாவட்ட கலெக்டரிடம் புகாரளித்தும் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், தெரு விளக்குகள் பொருத்தப்பட்டதாக அரசுக்கு பொய்யான தகவல் அளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிதள பொறுப்பாளர்களாக குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றது. தகுதியான அனைவருக்கும் பணிதள பொறுப்பாளர்களாக வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Advertisement

Related News