மதுராந்தகம் கல்வி மாவட்ட அரசு பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள்
Advertisement
மதுராந்தகம், மே 29: தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் ஜூன் 6ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால், அரசு பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள், நோட்டுகள், புத்தகப்பைகள், சீருடை ஆகியவற்றை, பள்ளி கல்வித்துறை, மாவட்ட பள்ளிகல்வி துறை அலுவலகங்களுக்கு கடந்த மாதம் அனுப்பி வைத்தது.
இந்நிலையில், மதுராந்தகம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் மாவட்ட கல்வி அலுவலகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அனைத்து இலவச பாட புத்தகங்கள், நோட்டுகள், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், லத்தூர், சித்தாமூர் ஆகிய 4 ஒன்றியங்களில் உள்ள, அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 67 பள்ளிகளுக்கு லாரிகள் மூலம் நேற்று அனுப்பு வைக்கப்பட்டன.
Advertisement