பழைய மாரியம்மன் கோவில் சாலையில் புதர் மண்டி கிடக்கும் மயானம்
Advertisement
தஞ்ைச,செப்.16: தஞ்சை பழைய மாரியம்மன் கோவில் சாலையில் மாநகராட்சி பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகே சமுத்திரம் ஏரி கரை ஓரத்தில் மயானம் அமைந்துள்ளது. இந்த மயானம் முறையான பராமரிப்பின்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி இருக்கிறது. மேலும் மயான பகுதியில் கருவேல மரங்களும் அதிகளவில் வளர்ந்து காணப்படுகிறது. அதுமட்டுமின்றி சமுத்திரம் ஏரியில் இருந்து நீர் வெளியேறி மயானத்தை சூழ்ந்து கொள்கிறது. எனவே மயான பகுதியை சீரமைக்கவும், சமுத்திரம் ஏரி கரையை உயர்த்தி அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement