நாட்டுப்புற இசை விழா; சாரத்தில் நின்று வேலை பார்த்தபோது தவறி விழுந்த பெயிண்டர் சாவு
வல்லம், செப். 30: தஞ்சாவூர் அருகே வல்லம் அண்ணா நகர் பகுதியில் ஒரு வீட்டில் பெயிண்டிங் வேலை பார்த்த போது தவறி விழுந்து பெயிண்டர் பரிதாபமாக இறந்தார். தஞ்சாவூர் அருகே வல்லம் ஹை ஸ்கூல் ரோடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் கண்ணன் (49). பெயிண்டர். இவர் வல்லம் அண்ணா நகர் பகுதியில் ஒரு வீட்டில் பெயிண்டிங் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது சாரத்தில் இருந்து தவறி கீழே விழுந்த கண்ணன் படுகாயம் அடைந்தார்.
உடன் அவரை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை டாக்டர்கள் கண்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கண்ணனின் மனைவி செங்கொடி வல்லம் போலீசில் புகார் செய்தார். இதை எடுத்து கண்ணன் உடலை வல்லம் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.