திருவிடைமருதூர் அருகே ஆடுதுறையில் 4 புதிய நகர பேருந்துகள் சேவை அமைச்சர் கோவி.செழியன் துவக்கி வைத்தார்
திருவிடைமருதூர், நவ.26: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே 4 புதிய நகர பேருந்துகள் சேவையை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் துவக்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை புதிய பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம்-1 கிளை சார்பில் கும்பகோணத்திலிருந்து கோமல், நெய்வாசல், குத்தாலம் மற்றும் மயிலாடுதுறைக்கும், நாகை மண்டலம் சார்பில் மயிலாடுதுறையிலிருந்து திருப்பனந்தாள் வரை செல்லும் 4 புதிய நகர பேருந்துகள் சேவை இயக்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி.ராமலிங்கம், மாவட்ட அவைத்தலைவர் நசீர்முகமது, ஒன்றிய செயலாளர் சுந்தர.ஜெயபால், ஆடுதுறை பேரூர் செயலாளர் கோசி.இளங்கோ, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் மண்டல பொது மேலாளர் சிங்காரவேலு, துணை மேலாளர் தங்கபாண்டியன், உதவி மேலாளர் (தொ.நு) ராஜேஷ், உதவி மேலாளர் (பயிற்சி) ராஜ்மோகன், கும்பகோணம்-1 கிளை மேலாளர் சுரேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.